உத்தரப்பிரதேசத்தை உலுக்கிய புயல்: தகரக் கொட்டகையோடு வானில் பறந்த வாலிபர் – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தை புயல் துவம்சம் செய்துவரும் நிலையில், புயலில் சிக்கிய இளைஞர் ஒருவர் 300 மீற்றர் உயரத்துக்கு தூக்கி வீசப்படும் காணொளி ஒன்று வைரலாகிவருகிறது.

300 மீற்றர் உயரம் தூக்கி வீசப்பட்ட இளைஞர்

உத்தரப்பிரதேசத்தை கடுமையான புயல் தாக்கிய நிலையில், பரேலி என்னுமிடத்தைச் சேர்ந்த Nanhe-miyan என்னும் இளைஞர் திருமண வளாகம் ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளார்.

புயலில் வேகம் அதிகரிக்கவே, அங்கிருந்த தகரக் கொட்டகை ஒன்றைப் பிடித்துக்கொண்டிருந்திருக்கிறார் Nanhe-miyan.

ஆனால், காற்று அந்த கொட்டகையையும் சேர்த்து தூக்கி வீச, அந்த தகரத்தைப் பிடித்திருந்த Nanhe-miyan வானில் சுமார் 300 மீற்றர் உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளார்.

அவர் அருகிலிருந்த வயல் ஒன்றில் சென்று விழுந்த நிலையில், இந்தக் காட்சியைக் கண்டவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், படுகாயம் அடைந்தாலும், Nanhe-miyan அதிர்ஷ்டசாலிதான்.

ஏனென்றால், அதே புயலில் சுமார் 89 மனிதர்கள் உயிரிழந்துள்ளார்கள், 53 பேர் காயமடைந்துள்ளார்கள். அத்துடன் 114 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.