லொறி – மோ. சைக்கிள் மோதி குடும்பஸ்தர் ஒருவர் மரணம்! – குருநாகலில் துயரச் சம்பவம்
குருநாகல், பதேனிய – அனுராதபுரம் வீதியில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் 49 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதேனிய – அனுராதபுரம் வீதியில் 36 ஆவது மைல்கல் அருகே, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதியுள்ளது.
விபத்தில் சிக்கித் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், உடனடியாக மீட்கப்பட்டு கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவர் அம்பன்பொல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்துக்கான காரணம் குறித்து அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
