மூத்த ஆங்கில ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் காலமானார் – அரசியல், சினிமா ஆய்வுகளின் ‘பேனா முனை’ ஓய்ந்தது.

இலங்கையின் மூத்த ஆங்கில ஊடகவியலாளரும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற அரசியல் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்ற செய்தி ஊடகத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசியல், இனப்பிரச்சினை மற்றும் புவிசார் அரசியல் விவகாரங்களை மிக நுணுக்கமாக ஆய்வு செய்து எழுதுவதில் இவர் தனித்துவமானவர். அதேவேளை, தமிழ் சினிமா மற்றும் அதன் வரலாற்றுப் பின்னணிகள் குறித்த இவரது கட்டுரைகள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.

இவர் ‘தி ஐலண்ட்’, ‘டெய்லி மிரர்’, ‘டெய்லி எஃப்.டி’ உள்ளிட்ட இலங்கையின் முன்னணி ஆங்கில நாளிதழ்களில் நீண்டகாலமாகப் பத்திகளை எழுதி வந்தார்.

தனது பிரத்தியேக அரசியல் இணையத்தளத்தினூடாக உலகளாவிய ரீதியில் இலங்கை விவகாரங்களைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்து வந்தார்.

இவரது ஆழமான அரசியல் பார்வைகள் மற்றும் விரிவான தரவுகள் சர்வதேச மட்டத்திலும் ஆய்வாளர்களால் உற்றுநோக்கப்பட்டவை.

அன்னாரின் மறைவு குறித்துத் தகவல் அறிந்த அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இவரது இறுதிச் சடங்குகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் குறித்த விவரங்கள் குடும்பத்தினரால் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயராஜ்ஜின் மறைவு இலங்கை ஊடகத்துறைக்கும், குறிப்பாக அரசியல் ஆய்வுத் துறைக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.