பஸ்ஸுடன் மோதிய மோ. சைக்கிள்! இளைஞர் ஒருவர் பரிதாப உயிரிழப்பு!!

கடுவன, புவகஸ்சார பாலத்திற்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

கடுவன – புவகஸ்சார பிரதான வீதியில் பயணித்த தனியாருக்குச் சொந்தமான பயணிகள் பஸ்ஸும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

விபத்தின் போது பஸ்ஸின் அதிவேகம் காரணமா அல்லது கவனக்குறைவா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.