அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 354.03 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

அதேவேளை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவுப் பெறுமதி 342.63 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

உலகச் சந்தையில் டொலர் பலமடைந்து வருவதன் காரணமாக, அதற்கு நிகரான இலங்கை ரூபாvதொடர்ச்சியாகப் பலவீனமடைந்து வருகின்றது என்று மத்திய வங்கியின் நாளாந்தப் புள்ளிவிவரத் தரவுகள் காட்டுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.