பச்சிலைப்பள்ளி பிரதேசசபையால் மரநடுகை செயற்றிட்டம்.

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசசபையால் இன்று மரநடுகை செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டது.

பளை பிரதேசத்தின் A9 நெடுஞ்சாலையின் இரு மருங்குகளிலும் மேற்கொள்ளபடவிருக்கும் குறித்த செயல் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு பளை வைத்தியசாலை முன்பாக ஏ9வீதி அருகே இன்று காலை 11.00 மணியளவில் இடம்பெற்றது.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்குள் 5000 மரங்களை நான்கு வருடங்களில் நாட்டுவதற்கு திட்டமிட்டப்பட்டுள்ளது. இவற்றில் ஆயிரம் மரங்கள் நாட்டப்பட்டுள்ளதோடு தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.