“எங்கள் பூர்வீகக் காணிகளை எங்களிடமே ஒப்படையுங்கள்!” – தையிட்டியில் நில உரிமையாளர்கள் போராட்டம்.
யாழ். தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அமைந்துள்ள தங்களது பூர்வீகக் காணிகளைத் தங்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி, நேற்றும் இன்றும் காணி உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த விகாரை அமைந்துள்ள நிலம் மற்றும் அதனைச் சூழவுள்ள தனியார் காணிகள் அனைத்தையும், அதன் உண்மையான உரிமையாளர்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இவர்கள் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


