பைடன் , பாப்பரசருக்கு வழங்கிய உறுதி மொழி

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ள ஜோ பைடனுக்கு தொலைப்பேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வத்திக்கான் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

ஏழைகளுக்கு நிவாரணம் வழங்குவது, காலநிலை மாற்றத்தைத் தடுப்பது, குடியேறிகளையும்,அகதிகளையும் அமெரிக்காவிற்குள் ஏற்றுக்கொள்வது போன்ற விடயங்களில் வத்திகானுடன் ஒத்துழைத்து செயற்பட விரும்புவதாகவும் பைடன் இதன் போது கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜோன் எப் கெனடிக்கு பின்னர் அமெரிக்காவில் தெரிவான முதலாவது ரோமன் கத்தோலிக்க ஜனாதிபதி ஜோ பைடன் என்பது குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.