கொழும்பில் 19 கைத்துப்பாக்கிகளுடன் நால்வர் கைது!

கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 19 கைத்துப்பாக்கிகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

மேல் மாகாண வடக்கு பிராந்தியத்துக்குப் பொறுப்பான குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட மற்றும் இரகசியச் சோதனை நடவடிக்கையின் போதே இந்தத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம், இந்த ஆயுதங்கள் எங்கு தயாரிக்கப்பட்டன, இவை எந்தவொரு பாதாள உலகக் குற்றச் செயல்களுக்காக அல்லது அச்சுறுத்தல்களுக்காகக் கொண்டுவரப்பட்டனவா என்பது தொடர்பில் பொலிஸார் தற்பொழுது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.