மாதாந்திர செலவு ரூ.2.24 லட்சம்: சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பிய புனே பெண்ணின் மாதாந்திர பட்ஜெட்!

பூனே,

ஒவ்வொரு மாதமும் குடும்பச் செலவை நிர்வகிப்பது இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய சவாலாகும். குடும்பத்தின் வரவு செலவு திட்டத்தை திறம்பட நிர்வகிப்பது என்பது இல்லத்தரசிகளுக்கு ஒரு முக்கியமான பொறுப்பே என்று சொல்லலாம்.

இந்தநிலையில் புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த மாதாந்திர செலவுக் கணக்கு, நெட்டிசன்களை தலைசுற்ற வைத்துள்ளது. பெரும்பாலும் வீட்டிலேயே சமைச்சு சாப்பிடுறோம், EV கார் இருக்குறதால பெட்ரோல் செலவும் இல்லை… ஆனாலும் மாசம் 2.2 லட்ச ரூபாய் கரையுது என புலம்பு தவித்துள்ளார். (இந்த குடும்பம் எந்த செலவை குறைக்கணும்? நீங்களாவது சஜஸ்ட் பண்ணுங்களேன்) என கூறியுள்ளார்.

அவர் வழங்கிய பட்டியல் இதோ..

கட்டுமானத்தில் உள்ள வீட்டுக்கான இஎம்ஐ (EMI) – ரூ.1.1 லட்சம்

தற்போதைய வீட்டு வாடகை – ரூ.28,000

மளிகை – ரூ.20,000

குழந்தைக்கு டே கேர் – 30,000

அவுட்டிங் மற்றும் பொழுதுபோக்கு – ரூ.15,000

கரன்ட் பில் – ரூ.6,000

இன்டர்நெட் – ரூ.500

ஆன்லைன் உணவு ஆர்டர்கள் – ரூ.3,000

ஷாப்பிங் – ரூ.10,000

வீட்டு உதவியாளருக்கு – ரூ.1,800

மொத்தம் – 2,24,300 என அதில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.