சென்னையில் பயங்கரம்: பள்ளிக்கரணை குப்பை கிடங்கு தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சாம்பல்!

சென்னையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதன் அருகே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பகுதிக்கும் அடுத்தடுத்து பரவியது.

இதில், 100-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன. அவை பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் என்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன என்றும் கூறப்படுகிறது. கரும்புகை வான் வரை பரவியுள்ளது.

இதனால், மேடவாக்கத்தில் இருந்து வேளச்சேரி வகை வாகன நெரிசல் ஏற்பட்டு உள்ளது. சென்னை பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரியில் கரும்புகையால் மக்கள் அவதியடைந்து உள்ளனர். தீயை விரைந்து அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.