பிரபல யூடியூபர் மாரிதாஸ் கைது

பிரபல யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் அவரது வீட்டில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

உண்மைக்கு மாறான தகவல்களை பரப்புவதாக மாரிதாஸ் மீது தவெக-வினர் புகார் அளித்தனர்.

இந்நிலையில் இன்று மதுரை வந்த சென்னை சைபர் க்ரைம் பொலிசார், மாரிதாஸை கைது செய்தனர்.

அவரை சென்னைக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா குறித்து ஏஐ புகைப்படத்தை வெளியிட்டு அவதூறு பரப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இவரது கைதுக்கு பாஜக, அதிமுக கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.