ஆந்திராவில் பெரும் சோகம்: உருக்கு ஆலை வெடி விபத்தில் 9 பேர் பலி; பலரது நிலை கவலைக்கிடம்

விசாகபட்டினம்,

ஆந்திர விசாகப்பட்டினத்தில் உள்ள விசாகா ஆலையில் பெரும் விபத்து ஏற்பட்டது. கொதி நிலையில் உள்ள உருக்கு குழம்புகளுடன் வாளிகள் சரிந்து விழுந்ததில் அதன் அடியில் சிக்கிக் கொண்ட 9 தொழிலாளர்கள் உடல்கள் நசுங்கி, கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ள நிலையில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தகவல் அறிந்த மீட்புப்படையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அங்கு உருகிய எக்கை ஏற்றிச்சென்ற கலன் வெடித்து சிதறி உள்ளதாக கூறப்படுகிறது. இதில்,மிக அதிக வெப்பநிலையில்( 1,600 டிகிரி செல்சியஸ் அளவில்) எக்கை கொண்டு சென்றதால் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த ஆலையில் ஏற்பட்ட விபத்து பற்றி அறிந்த ஆந்திர முதல் – மந்திரி சந்திரபாபு நாயுடு கவலை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவியை உடனடியாக செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.