செம்மணியில் தொடரும் சோகம் மேலும் 12 மனித எலும்புக்கூடுகள் – இரண்டு மாடுகளின் எலும்புக்கூடுகளும் அடையாளம்.
https://we.tl/t-1t1GgvTdmfphdL4K
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 21 ஆம் நாள் அகழ்வாய்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது, புதிதாக 12 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட பின்னர் இலக்கமிடப்பட்டுள்ளன.

அத்துடன், முழுமையாக வளர்ந்த ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதி, சிறுவர்களுடைய 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மற்றும் குழந்தைகளுடைய 2 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மொத்தம் 7 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் நேற்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்தும் இதுவரை மொத்தமாக 339 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 318 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது மாடுகளுடைய இரண்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
