அசாமில் இந்திய விமானப்படை விமானம் விபத்து: 5 வீரர்கள் உயிரிழப்பு!

கவுகாத்தி,

அசாம் மாநிலம் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படைக்கு (IAF) சொந்தமான ஏஎன்-32 (AN-32) ரக போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

தளத்தில் ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் பலியாகினர். உயிர் பிழைத்துள்ள ஒரு துணை விமானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் பணி நடைபெறுவதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடைபெற்றதா? அல்லது மோசமான வானிலை காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏஎன்-32 என்பது ரஷிய தயாரிப்பு போக்குவரத்து விமானமாகும். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் இந்திய விமானப்படையில் இந்த விமானம் பணியாற்றியதாக சொல்லப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.