ஜார்கண்ட்: மின்னல் தாக்கி 8 பேர் பலி

ராஞ்சி

ஜார்கண்டில் 6 மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் சிக்கி, கடந்த 24 மணிநேரத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் ராஞ்சி மற்றும் கார்வா மாவட்டங்களில் தலா 2 பேர், சத்ரா, கிரிதி, செராய்கேளா-கர்சாவன் மற்றும் ஜம்தரா மாவட்டங்களில் தலா ஒருவரும் பலியாகி உள்ளனர்.

இவர்களில் 3 பேர் பெண்கள் மற்றும் 2 பேர் சிறுவர்கள் ஆவர் என தெரிய வந்துள்ளது. இதுதவிர 4 பேர் காயமடைந்துள்ளனர். இதனை போலீசார் இன்று தெரிவித்தனர்.

மரத்திற்கு அடியில்
அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இவர்களில் ரீனா தேவி என்ற பெண் மரத்திற்கு அடியில் நின்றபோதும், ராம் அவதார் பால் என்பவர் ஆடு மேய்க்கும்போதும் மின்னல் தாக்கி பலியானார்கள்.

Leave A Reply

Your email address will not be published.