ஸ்லோவாக்கியா தலைவருக்கு இந்தியாவின் பாரம்பரிய ‘தேகுவா’ பலகாரத்தை பரிசளித்தார் பிரதமர் மோடி
ஸ்லோவாக்கியா நாடாளுமன்றத் தலைவர் ரிச்சர்ட் ராசிக்கு ’தேகுவா’ என்ற இந்தியாவின் பாரம்பரிய உணவை பிரதமர் நரேந்திர மோடி, பரிசாக வழங்கிய செய்தி தற்போது வைரலாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, தனது ஒருவாரகால அரசுமுறைய் பயணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய இரு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி, 1993 ஆம் ஆண்டு ஸ்லோவாக்கியா சுதந்திரம் பெற்ற பிறகு, அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமர் மோடி ஆவார்.
தனது பயணத்தின் முதல்கட்டமாக பிரான்ஸின் துறைமுக நகரான நைஸை சென்றடைந்த பிரதமர், அங்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) அந்நாட்டின் அதிபர் இமானுவல் மேக்ரானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து, அந்த நாட்டின் முக்கியத் தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி, பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்று உலகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதனிடையே இந்த அரசுமுறைப் பயணத்தில் கடந்த ஜூன் 15 ஆம் தேதி ஸ்லோவாக்கியா சென்றபோது, அதன் நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு பிகார், ஜார்க்கண் போன்ற மாநிலங்களின் பாரம்பரிய உணவான தேகுவா-வை பிரதமர் மோடி பரிசாக வழங்கிய செய்தி தற்போது வைரலாகி வருகிறது.
தேகுவா என்பது பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் பாரம்பரிய இனிப்பு பலகாரம். இது கோதுமை மாவு, வெல்லம் அல்லது சர்க்கரை, பெருஞ்சீரக விதைகள் மற்றும் நெய் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது.
மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஸ்லோவாக்கியா நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான ‘தி ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிராஸ்’ -ஐ அவருக்கு வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
