கண்டல் தாவரங்கள் நாட்டிவைக்கும் நிகழ்வு.

திருகோணமலை மாவட்டத்தின் கப்பல்துறை பிரதேசத்தில் (17) 350க்கு மேற்பட்ட கண்டல் தாவரங்கள் நாட்டிவைக்கும் நிகழ்வு சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி சட்டத்தரணி தர்சினி லஹந்தபுர தலைமையில் நடைபெற்றது.

எதிர்வரும் 03 வருடங்களுக்குள் நாடளாவிய ரீதியில் 60 ஏக்கர் பரப்பில் கண்டல்தாவரங்களை நட உத்தேசித்துள்ளதாக இதன்போது சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி இதன்போது தெரிவித்தார்.

கண்டல் தாவரங்கள் சுற்றாடலிற்கு அதிகம் நன்மை அளிப்பதாகவும் கண்டல் தாவரங்களின் அழிவை தடுத்து அவற்றை பாதுகாப்பதன் மூலம் பொருளாதார ரீதியாக பல பலாபலன்கள் கிடைக்கும் என்று இதன் போது பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஏ.அனஸ்,திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ்,சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் வடகிழக்கு மாகாண உதவி முகாமையாளர் டி.சிறீபதி , பிரதேச மீன்பிடி சங்க அங்கத்தவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.