கொழும்பின் புறநகர் பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் நீர்வெட்டு!

கொழும்பின் புறநகர் பகுதிகளில் இன்று புதன்கிழமை இரவு 8 மணி முதல் நாளை வியாழக்கிழமை இரவு 8 மணி வரை 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்டி, பாதுக்கை, ஹோமாகம, கொட்டாவை, பன்னிப்பிட்டி மற்றும் பெலன்வத்தை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் .

அதேவேளை, மகரகம பகுதிக்கு குறைந்த அழுத்தத்தில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

கலாதுவாவவிலிருந்து பொரலத்கமுவ வரை நீர் விநியோகிக்கும் பிரதான நீர் விநியோகக் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர் விநியோகத்தடை ஏற்படுத்தப்படுகின்றது என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.