மதிய உணவுத் திட்டத்தில் இனி முட்டை கிடையாது – பா.ஜ.க அரசின் புதிய அறிவிப்பு!
மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தில் இனி முட்டை வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி ஆட்சியின்போது வாரத்தில் ஒரு நாள் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அங்கு பாஜக ஆட்சி அமைந்த பிறகு முதல் முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், பள்ளி மதிய உணவுத் திட்டத்தை இஸ்கான் அமைப்பு நிர்வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மதிய உணவுத் திட்டம் முழுமையாக சைவமாக மாற்றப்பட உள்ளது. முட்டைக்கு பதிலாக பனீர், ராஜ்மா மற்றும் சோயாபீன்ஸ் வழங்கப்படும் என இஸ்கான் தெரிவித்துள்ளது.
இந்த முடிவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முட்டையை நீக்குவதால் குழந்தைகளின் ஊட்டச்சத்து பாதிக்கப்படும் என்றும், கட்டாய சைவ உணவு முறையை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.
