பொலன்னறுவையில் இரு குழுக்கள் மோதல்! 47 வயது நபர் கொடூரமாக வெட்டிக்கொலை!! – 7 சந்தேகநபர்கள் தலைமறைவு.
பொலன்னறுவை மாவட்டம், மெதிரிகிரியை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, ஆண் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை இரவு இந்தக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மெதிரிகிரியை பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய திருமணமாகாத நபரே மேற்படி சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, குறித்த பகுதியில் உள்ள இரு குழுக்களுக்கிடையில் கடந்த பல நாள்களாகத் தொடர்ச்சியாக முரண்பாடுகள் நிலவி வந்துள்ளன. இந்தநிலையில், நேற்று சனிக்கிழமை இரவு இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட மோதல் முற்றவே, அது கொலையில் முடிவடைந்துள்ளது.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்டுள்ள 7 சந்தேகநபர்கள் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பியோடி, தலைமறைவாகியுள்ளனர்.
தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்வதற்குரிய விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு, மெதிரிகிரிய பொலிஸாரால் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
