ஹெரோயின் போதைப்பொருளுடன் தனியார் பஸ் சாரதி ஒருவர் கைது!
கொழும்பு மாவட்டம், இரத்மலானை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தனியார் பஸ் சாரதி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சீதவாக்கை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இரத்மலானை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த போது, பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
