பாலியல் குற்றவாளிகளை ஒழிக்க புதிய அதிரடி திட்டம்: தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த டிஜிபி உத்தரவு!

பாலியல் குற்றவாளிகளை ஒழித்துக் கட்டுவதற்காக தென்மண்டல ஐஐி விஜயேந்திரபிதாரி சிறப்பு அதிரடி திட்டமொன்றை தொடங்கிய செயல்படுத்தி வருகிறார்.

இது தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என டிஜிபி மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐஐி விஜயேந்திரபிதாரி பேசுகையில், சர்வதேச போலிசில் குற்றவாளிகளை 8 வகைகளாக பிரித்துள்ளனர், அவர்கள் செய்யும் குற்றங்களுக்கு ஏற்ப வண்ணங்கள் கொடுக்கப்படும், இதனை பொறுத்து அவர்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள், உரிய தண்டனையும் பெற்றுக்கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் தென் மாவட்டங்கள் குறித்த திட்டம் நல்ல பலனை கொடுக்கத் தொடங்கியுள்ளதாகவும், விரைவில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.