ஹஜ் கடமைகளை நிறைவேற்ற வெளிநாட்டு யாத்திரிகர்களுக்கு தடை

ஹஜ் கடமைகளை நிறைவேற்ற வெளிநாட்டு யாத்திரிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

கொவிட் – 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் சவூதியை சேர்ந்தவர்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அனுமதி வழங்கப்பட உள்ளதாக சவூதி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடந்தோறும் 20 இலட்சத்திற்கும் அதிகமான யாத்திரிகர்கள் மக்கா மற்றும் மதீனா நகர்களுக்கு யாத்திரிகை மேற்கொள்கின்ற நிலையிலேயே கொரோனா வைரஸை காரணம் காட்டி இந்த கட்டுப்பாடுகள் அமுலாக்கப்பட்டுள்ளன.

கொவிட் – 19 வைரஸ் காரணமாக சவூதி அரேபியாவில் 161,000 இற்கும் அதிகமானோர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 1,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Comments are closed.