கோவை: மாவூத்தம்பதி அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பரிதாப பலி!

கோவை: மதுக்கரை ஒன்றியம் மாவூத்தம்பதி அருகே, காட்டு யானை தாக்கி, விவசாயி பலியானார்.

புதுபதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நடராஜ் (72) இன்று(ஜூலை 14) காலை வழக்கம்போல, அவரது தோட்டத்தில் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, தோட்டத்தில் நுழைந்த காட்டு யானை அவரை திடீரென தாக்கியது.

இதில் அவர் பலத்த காயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழே விழுந்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கும், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நடராஜ், 108 ஆம்புலன்ஸ் மூலம், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, நடராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தையடுத்து, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, கிராமப்புற பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காட்டு யானை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.