ஈன்றெடுத்த பெற்றோரை படுகொலை செய்த மகன் – மாத்தளையில் பெரும் சோகம்.

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய – கிரவலவெல்கடுவ பகுதியில் நேற்று இரவு மகன் ஒருவரால் அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் கிரலவெல்கடுவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய தந்தையும், 54 வயதுடைய தாயும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து, இந்த இரட்டைக் கொலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த தம்பதியரின் 26 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய பொலிஸார் இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.