200 பேரிடம் வாக்குமூலம் – அமைச்சர் நளிந்த தகவல்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.
இதுவரை குறித்த சம்பவம் தொடர்பாக 200 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, நீர்கொழும்பு சிறையிலிருந்து ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து வினவப்பட்டதற்கு, அந்தக் குற்றச்சாட்டுகளைத் தான் முற்றாக நிராகரிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
சர்வதேச அரங்கில் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில், சில தரப்பினர் திட்டமிட்டு இவ்வாறான பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகின்றனர் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
