கேரளா: மிக்ஸர் சாப்பிடும்போது வேர்க்கடலை தொண்டையில் சிக்கி 3 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு!

இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள குன்னும்புறம் பகுதியில், ‘மிக்ஸர்’ சாப்பிடும்போது வேர்க்கடலை தொண்டையில் சிக்கி 3 வயது சிறுவன் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குன்னும்புறம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 3 வயது சிறுவன் வீட்டில் வைத்து ‘மிக்ஸர்’ தின்பண்டத்தைச் சாப்பிட்டுள்ளார். இதன்போது மிக்ஸரில் இருந்த வேர்க்கடலை எதிர்பாராத விதமாக சிறுவனின் தொண்டையில் சிக்கி சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

பதறிய பெற்றோர் தொண்டையில் சிக்கிய வேர்க்கடலையை எடுக்க முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. சிறுவன் மூச்சுவிட முடியாமல் திணறியதைக் கண்ட பெற்றோர், சிறுவனை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.