ஆந்திராவில் கொவிட்-19: 12 பேருக்கு தொற்று, 4 பேர் உயிரிழப்பு.

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொவிட்-19 தொற்றினால் , சிகிச்சை பலனின்றி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள்
உயிரிழந்த நான்கு பேரும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் பிற நீண்டகால உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் 26 ஆம் திகதி முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை ஆந்திராவில் 67 கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதில் 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது பாதிக்கப்பட்டவர்களில் மூவர் வீட்டுத் தனிமையிலும், இருவர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் மூவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே பொது இடங்களில் பொதுமக்கள் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.