புதன் செம்மணி செல்கின்றனர் ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர்! – யாழ். நீதிவான் நீதிமன்றம் அனுமதி.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரடியாகப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அந்தப் பகுதியைப் பார்வையிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினர் சார்பில் நீதிமன்றத்திடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இந்த விண்ணப்பத்தை இன்று திங்கட்கிழமை பரிசீலித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் நாளைமறுதினம் புதன்கிழமை காலை 9 மணிக்குச் செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதிக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிடவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.