ஜனாதிபதி அநுரகுமாரவால் நியமிக்கப்பட்ட நிதி ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் – ஜனாதிபதியின் செயலாளரால் நியமனக் கடிதங்கள் கையளிப்பு.

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் திருமதி என். ஆர். அனீஸ் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் ஏனைய உறுப்பினர்களாக ஜே. எம். சி. ஜே. விஜேதுங்க மற்றும் கே. கருணாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் வழங்கி வைத்தார்.

நிதி ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.