மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவன் மாயம்!

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில் நேற்று புதன்கிழமை மதியம் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவன் ஒருவர் தண்ணீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளார்.

நான்கு சிறுவர்கள் இணைந்து ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. எனினும், ஏனைய மூன்று சிறுவர்களும் எவ்வித ஆபத்துமின்றிப் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

காணாமல்போன சிறுவனைத் தேடும் பணிகளில் பிரதேச மக்களும், கம்பளைப் பொலிஸாரும் இணைந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்துக் கம்பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.