ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு புதிய பயிற்சியாளர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு 8 பாடநெறிகளுக்காக 153 புதிய பயிற்சியாளர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இவருடன் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் கலைச்செல்விதீயும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்குபற்றினார்.

இப்பயிற்சி நெறிகளில் இணையும் மாணவர்களுக்கான 6 மாத காலப் பயிற்சி, உணவு மற்றும் தங்குமிட வசதிகள் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் அரசே முழுமையாக ஏற்று இதற்கான நிதி ஒ துக்கீட்டைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மலையக இளைஞர், யுவதிகளின் தொழிற்திறனை மேம்படுத்தி, அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பு கனவுகளை நனவாக்கும் தேசிய நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.