விஜய் வழங்கிய அரசு பணி நியமனங்கள் ரத்து: சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி தீர்ப்பு!

தமிழக முதலமைச்சர் விஜய், கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கிய அரசு பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க விதிகளில் இடமில்லை
பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கியிருந்தார்.

இந் நிலையில் அரசியல் கூட்டங்களில் பலியாவோருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க விதிகளில் இடமில்லை எனத் தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், அந்தப் பணி நியமனங்கள் செல்லாது எனவும் அவற்றை ரத்து செய்தும் தீர்ப்பளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.