கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு

பெங்களூர்,

கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம்
இதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படிதமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது;

காவிரி ஒழுங்கு முறை ஆணையம் தமிழகத்திற்கு 15 நாட்களுக்குத் தினமும் வினாடிக்கு 3500 கன அடி நீரைத் திறந்துவிடக் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவுப்படி கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிடவில்லை. அதே

நேரத்தில், இந்த உத்தரவிற்கு எதிராகக் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில் காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தின் 140 வதுகூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

தினமும் 12,000 கன அடிநீர் திறந்துவிட உத்தரவு
கூட்டத்தில் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுத்தலைவர் கூறும்போது “சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடகா முன் வர வேண்டும். தமிழகத்துக்கு அடுத்த 15 நாள்களுக்குத் தினமும் 12,000 கன அடிநீரைத்திறந்து விட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

மேட்டூர் அணை
இதை ஏற்று தொடக்கத்தில் கபினி அணையில் இருந்து மட்டும் திறக்கப்பட்ட நிலையில், தற்போது கே.ஆர்.எஸ் அணையில் இருந்தும் திறக்கப்படும் நீர் பிலிகுண்டுலு எல்லை வழியே மேட்டூர் அணையை வந்தடைய உள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் டெல்டா பாசனப் பகுதிகளுக்கான நீர் தேவை கணிசமாக நிவர்த்தியாகும் எனவும், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பருவமழைத்தீவிரத்தால் அணைகளின் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்பட்சத்தில் உபரிநீரின் அளவு உயர்த்தப்படக் கூடும் என்பதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.