கொழும்புக்கான வியட்நாம் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் இன்று….
வியட்நாமின் தேசிய விமான நிறுவனமான ‘வியட்நாம் ஏர்லைன்ஸ்’ (Vietnam Airlines), ஹோ சி மின் நகரிலிருந்து (SGN) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (CMB) இன்று (16) முதல் தனது வழக்கமான விமான சேவைகளைத் தொடங்கவுள்ளது.
இந்நிறுவனம் வாரத்திற்கு மூன்று முறை இருவழிச் சேவைகளை மேற்கொள்ளவுள்ளது; இதன்படி, ஹோ சி மின் நகரிலிருந்து புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், கொழும்பிலிருந்து திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் விமானங்கள் புறப்படும். இச்சேவைக்கு ஏர்பஸ் A321 (Airbus A321) ரக விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
பயண நேரத்தைப் பொறுத்தவரை, ஹோ சி மின் நகரிலிருந்து 5 மணிநேரம் 20 நிமிடங்களும், கொழும்பிலிருந்து 5 மணிநேரம் 10 நிமிடங்களும் ஆகும்.
வியட்நாம் மற்றும் இலங்கை இடையிலான பயணத் தேவை அதிகரிப்பு மற்றும் தெற்காசிய சந்தையில் ஏற்படக்கூடிய வளர்ச்சி ஆகியவற்றை முன்னிட்டு இந்த விமானப் பாதைக்கான சேவை தொடங்கப்படுகிறது.
இதற்கமைய, VN671 என்ற விமானம் ஹோ சி மின் நகரிலிருந்து 19:45 மணிக்கு புறப்பட்டு, 23:35 மணிக்கு கொழும்பை வந்தடையும்.
