நுவரெலியா பிரதேச செயலாளர் அலுவலகங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குறித்து விசாரிக்க தணிக்குழு.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க, தணிக்கைக் குழுவொன்றை நியமிக்கும் நடவடிக்கையை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மேற்பார்வையிடவுள்ளதாக நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீராராச்சி தெரிவித்தார்.

2023 முதல் 2026 வரையிலான காலப்பகுதிக்கு, மாவட்டத்தில் உள்ள அனைத்து 10 பிரதேச செயலகங்களிலும் இந்தத் தணிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுரவீராராச்சி கூறினார்.

குறிப்பாக, நோர்வூட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களில் ‘அஸ்வெசும’ (Aswesuma) திட்டப் பயனாளிகள் விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் குறித்தும் இது ஆராயும் என்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

பல்வேறு அரச நிவாரணக் கொடுப்பனவுகள் தகுதியுள்ள பயனாளிகளுக்குச் சரியாக விநியோகிக்கப்பட்டனவா என்பதையும் இந்த விசாரணை உறுதிப்படுத்தும் என்று அவர் கூறினார்.

‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட அனர்த்த நிவாரணம், கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் சமுர்த்தித் திட்டம் ஊடாகக் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபா கொடுப்பனவு, சமுர்த்திப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட அரச நிவாரணங்கள் மற்றும் முதியோருக்கான கொடுப்பனவுகள் ஆகியவை இதில் அடங்கும்.

Leave A Reply

Your email address will not be published.