கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு! – சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடல்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் இரு தரப்பு உறவுகள் தொடர்பில் இருவரும் சிநேகபூர்வமாகக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.