யாழில் இன்று காணாமற்போனோர் பற்றிய அலுவலக நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்தும் பஸ்களில் அழைத்து வரப்படும் நபர்கள்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பஸ்கள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள இந்நிகழ்வு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அரசால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இடைக்கால நிவாரணமாக 2 இலட்சம் ரூபா பெற்றவர்களிலிருந்து இந்த 400 பேரும் பஸ்கள் மூலம் அழைத்துவரப்படவுள்ளனர். இவர்களுடன் சேர்த்து இந்த நிகழ்வில் 450 இற்கும் மேற்பட்டோர் பங்குகொள்வர் என மண்டப ஏற்பாட்டுத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.