கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெறத் திட்டம்.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அங்குனுகொலபெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெறுவது அவசியமானது எனக் கொழும்பு குற்றப் பிரிவு இன்று கொழும்பு பிரதான நீதிவானிடம் தெரிவித்துள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், அதன் தொடர்ச்சியாகவே இஷாரா செவ்வந்தியிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.