கோட்டா அரசின் ‘2021 பட்ஜட்’ இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்!

கோட்டா அரசின் ‘2021 பட்ஜட்’ இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்! – ஆதரவு 151; எதிர்ப்பு 52

2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று மாலை 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் கடந்த 17ஆம் திகதி நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்சவால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

மறுநாள் 18 ஆம் திகதி முதல் இன்று மாலை வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்ற நிலையிலேயே மாலை 5.45 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் பட்ஜட்டுக்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி 99 மேலதிக வாக்குகளால் பட்ஜட் நிறைவேறியது

Leave A Reply

Your email address will not be published.