தேசிய லொத்தர் சபை விவகாரம்: வாக்குமூலம் அளித்ததையடுத்து முன்னாள் அமைச்சர் ரவி கைது!

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று ஆஜரான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டத்துக்கமைய வேலைக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்களை தனது அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தினார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் வருகை தராததன் காரணமாக நேற்றுமுன்தினம் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரின் வீட்டுக்குச் சென்றிருந்தனர்.

எனினும், அவர் வீட்டில் இருக்கவில்லை என்பதுடன் தனிப்பட்ட காரணங்களினால் ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்க வேறு ஒரு திகதியை வழங்குமாறு தனது சட்டத்தரணிக்ள ஊடாக ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.