ஜோன்ஸ்டனும் இன்று கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று வெள்ளிக்கிழமை ஆஜரான நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசுக்குச் சுமார் 7.4 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தினார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ கேட்போர் கூடத்துக்கு நாற்காலிகளை விநியோகிப்பதற்காகச் சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனத்தை நீக்கிவிட்டு, அதற்கான ஒப்பந்தத்தைத் தனக்குத் தொடர்புடைய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கினார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.