நாமலுக்கு வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதி.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டிலிருந்து உணவு வழங்குவதற்குச் சிறைச்சாலைகள் திணைக்களம் அனுமதி அளித்துள்ளது.
நாமல் ராஜபக்ஷ தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்கவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் செனக பல்லேவத்த தெரிவித்தார்.
இதேவேளை, வெலிக்கடைச் சிறைச்சாலையில் நாமல் ராஜபக்ஷ தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூண்டுக்கு அண்மித்த பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
அத்துடன், தினசரி மூன்று நபர்கள் நாமல் ராஜபக்ஷவைப் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
