கொழும்பில் ஓட்டோ சாரதி சுட்டுக்கொலை!

கொழும்பு, தெமட்டகொட பகுதியில் உள்ள ‘களு பாலம’ அருகில் நேற்று வியாழக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஓட்டோ சாரதியே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்தவர் உடனடியாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபரைக் கண்டறியவும், சம்பவத்துக்கான பின்னணியைத் துப்புதுலக்கவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.