திருப்பதியில் இனி பிளாஸ்டிக் இல்லை: லட்டு பிரசாதத்திற்கு சணல் பைகள் அறிமுகம்!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கட்டாயம் தரிசனம் முடித்த பிறகு லட்டு வாங்கி செல்வது அவசியமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில், பிரசாத லட்டுகளை பிளாஸ்டிக் பைகளில் பக்தர்கள் எடுத்துச் சென்று மலையில் வீசுவதால் அங்கு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

அதனால் திருப்பதி தேவஸ்தானம் மத்திய அரசுடன் இணைந்து சணல் பைகளை விற்பனை செய்து வருகிறது. மேலும் இந்த சணல் பை லட்டு அளவிற்கு ஏற்றார் போல் ரூபாய் 10, 20, 50, 80, 100 விலைகளில் விற்கப்படுகிறது.

கோவிலுக்கு பின்புறம் இருக்கக்கூடிய லட்டு விற்பனை மையத்தில் இயங்கும் இந்திய சணல் கழகத்தின் விற்பனை மையத்தில் விற்கப்படுகின்றன. இவற்றுடன் மக்கும் தன்மை உள்ள பைகளும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த செய்தி பக்தர்களிடையே பெரிய பரபரப்பும் ஒரு நல்ல மாற்றத்திற்கான வழியாகவும் பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.