கட்டுமான பணியின் போது கிரேன் கவிழ்ந்து என்ஜினீயர் உள்பட 3 பேர் உயிரிழப்பு

திருப்பதி,

திருப்பதி டி.பி.ஆர். சாலையில் தனியார் விடுதி கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதில் வட மாநில தொழிலாளர்கள் உள்பட பலர் ஈடுபட்டு வந்தனர்.

கிரேன்
இந்த நிலையில் நேற்றும் கட்டுமான பணி நடைபெற்றது. இதில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். கட்டுமான பணியில் கிரேன் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த ராட்சத கிரேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஒரு புறமாக கவிழ்ந்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பொதுமக்களின் உதவியுடன் கிரேனுக்கு அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் ஒடிசாவை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ராமாராவ், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த கட்டுமான பொறியாளர் சந்தீப், திருப்பதியை சேர்ந்த காவலாளி கங்கையா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 2 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.