இந்தியாவில் ஏஐ மற்றும் கிளவுட் துறைகளில் நிபுணர்கள் தட்டுப்பாடு: ஆய்வறிக்கை எச்சரிக்கை!

புதுடெல்லி,

இந்தியாவில் ஜெனரேட்டிவ் ஏஐ துறையில் திறமையான பணியாளர்களுக்கு 53 சதவீதம் பற்றாக்குறை நிலவுகிறது. அதேபோல் இந்திய தகவல் தொழில்நுட்ப பணியாளர்களில் 16 சதவீதம் பேர் மட்டுமே ஏஐ தொடர்பான திறன்களை பெற்றுள்ளனர் என்று ஆய்வறிக்கை கூறியுள்ளது.

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளன. இதனால் ஏஐ திறன் கொண்ட பணியாளர்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

பணியாளர்கள் பற்றாக்குறை
இந்த நிலையில் இந்தியாவில் ஏஐ திறன் கொண்ட பணியாளர்களின் தேவை மற்றும் இருப்புக்கு இடையே பெரிய இடைவெளி இருப்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஜெனரேட்டிவ் ஏஐ துறையில் திறமையான பணியாளர்களுக்கு 53 சதவீதம் பற்றாக்குறை நிலவுகிறது. அதேபோல் இந்திய தகவல் தொழில்நுட்ப பணியாளர்களில் 16 சதவீதம் பேர் மட்டுமே ஏஐ தொடர்பான திறன்களை பெற்றுள்ளனர் என்று ஆய்வறிக்கை கூறியுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறைகளைச் சேர்ந்த சுமார் 37 ஆயிரம் பணிகளை ஆய்வு செய்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

கிளவுட் துறையிலும் பற்றாக்குறை
ஏஐ துறை மட்டுமின்றி கிளவுட் தொழில்நுட்ப துறையிலும் திறமையான பணியாளர்களுக்கு 55 முதல் 60 சதவீதம் வரை பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் பாதுகாப்பு துறையில் இந்த பற்றாக்குறை 25 முதல் 30 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் சுமார் 20 லட்சம் பேர் ஏஐ தொடர்பான திறன்களை பெற்றிருந்தாலும், அவர்களில் சுமார் 3 லட்சம் பேர் மட்டுமே மேம்பட்ட ஏஐ திறன்களை கொண்டிருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஜென் ஏஐ, டேடா சயின்ஸ் உள்ளிட்ட துறைகளில் திறமையான பணியாளர்களுக்கான தேவை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.