சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பெண்களை அவதூறாக பேசிய வழக்கில், சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.

சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை
தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண் ஒருவர், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண்களை அவதூறாகப் பேசியதாக எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவசக்தி, சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சவுக்கு சங்கருக்கு 30 நாள்கள் அவகாசம் வழங்கி நீதிபதி சிவசக்தி உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.