காலியில் ‘லொகு பெட்டி’யின் சகோதரர் சுட்டுப் படுகொலை!

காலி, அஹுங்கல்லவில் இன்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரவு 8:10 மணியளவில் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் 9 மி.மீ. ரகப் பிஸ்டல் துப்பாக்கியால் சுட்டு இந்தக் கொலையைச் செய்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் லந்துவாஹந்தி சுகத் நுவன் குமார டி சில்வா என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாகக் கருதப்படும் “லொகு பெட்டி” என்பவரின் சகோதரர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.